திரைவிமர்சனம்..! - "ருத்ர தாண்டவம்" - என்ன கதை..? - என்ன பண்ணியிருக்காங்க..?


மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்டு ரிஷி, தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ருத்ர தாண்டவம். 
 
இந்த படம் பலதரப்பட்ட எதிர்ப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் இன்று திரையங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. 
 

என்ன கதை..?

 
போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் முயற்சியில் இறங்கும் காவல் ஆய்வாளர் ருத்ர பிரபாகரன் எதிர்பாராத விதமாக கொலை வழக்கில் ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். அதன் பின்னணியில் சாதியப் பிரச்னை தலைதூக்குகிறது. 
 
தான் ஒரு குற்றமற்றவர் என்பதை அவர் எப்படி நிரூபிக்கிறார் என்பதே ருத்ர தாண்டவம் படத்தின் கதை. 
 

என்ன படம்..?

படத்தின் கதாநாயகன் ருத்ர பிரபாகரனாக ரிச்சர்டு ரிஷி. காவல் ஆய்வாளராக தோற்றத்தில் நிரூபிக்கும் அவர் ஒட்டு மொத்த படத்தையும் தூக்கி சுமக்கிறார். படத்தில் வில்லனாக கௌதம் வாசுதேவ் மேனன் வெறித்தனம். 
 
அவரது பட வில்லன்களைப் போல வசனங்களை உச்சரிக்கிறார். படத்தின் முதல் பாதி முழுக்க ரிச்சர்டு, நேர்மையான, அநியாயத்தைக் கண்டால் பொங்குகின்ற காவல் ஆய்வாளர் என்பதை காட்டுவதற்கான காட்சிகள் இடம்பெற்று அவரது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து கொண்டே சொல்கிறந்து. 
 
முதல் காட்சியில் பப் ஒன்றில் இளைஞர்கள் சிலர் போதை மருந்துகளை பெண்களுக்கு கொடுத்து அவர்களை மோசமாக படமெடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு ரிச்சர்டு ரிஷிக்கு வருகிறது. 
 
தன் குழுவில் இருக்கும் பெண்ணை அந்த பப்புக்கு அனுப்பி , தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் பார்த்திராத வகையில், அந்தக் குழுவினரை பிடிப்பார். 
 
போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் சாதி, மத பிரச்னைகள் அதற்கு பின்னணியில் இருக்கும் அரசியல் ஆகியவற்றை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். குறிப்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை (பிசிஆர்) தவறாக பயன்படுத்துவதால் ஒரு காவல் அதிகாரிக்கு ஏற்படும் பாதிப்பை கூறுகிறது படம். 
 

பொழந்து கட்டும் மோகன் ஜி

 
போதைப் பொருள் கடத்தல் எப்படி நடைபெறுகிறது மற்றும் போதைப் பொருள் பயன்படுத்துவதினால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை மிக அழுத்தமாக இயக்குநர் பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
 
 
ஒருவர் போதைப் பொருள் பயன்படுத்துவதால் அவரது குடும்பத்துக்கு எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்வுப்பூர்வமான காட்சிகளால் விளக்கியிருப்பதற்கு பாராட்டுகள். வழக்கறிஞராக வரும் ராதாரவி, அம்பேத்கர் சாதியத் தலைவராக மாற்றப்பட்டு விட்டதாக வேதனை தெரிவிக்கிறார். 
 
மேலும் கிறிஸ்தவ சபைக் கூட்டம் நடப்பதாக காட்டப்படுகிறது. அதில் பாதிரியார் ஒருவர் இந்து மதத்தவர்களை சாத்தான் என விமரிசிப்பதாக காட்டப்படுகிறது. மேலும் மதம் மாற்றம் குறித்து காரணத்தைக் கூறும்போது, ஒரு சிலர் அரசியல்வாதிகள் பேச்சைக் கேட்டுவிட்டு மதம் மாறுவதாக வசனம் இடம் பெறுகிறது. 
 
இப்படி படம் முழுக்க நாட்டில் தற்போது நடக்கும் அநியாயங்களை வெளிப்படையாக கூறி தோலுரிக்கும் படி பொழந்து கட்டியுள்ளார் மோகன் ஜி. 
 

தில்லு வேணும்

 
மேலும் படத்தில் காட்டப்படும் சில அரசியல்வாதிகள் நிஜ அரசியல் தலைவர்களை நினைவுபடுத்துகிறார்கள். வில்லன், கௌதம் மேனன் நிஜத்தில் யார் என்பதை அவர் படத்தில் தோன்றிய சில நிமிடங்களில் தெரிந்து விடும்.
 
மேலும், அவர் சில போராட்டங்களை தூண்டிவிட்டு, அதன் மூலம் ஆதாயம் தேடிக்கொள்வது போல் காட்டப்படுகிறது. பலரும் பேச தயங்கும், பேச மறுக்கும் விஷயங்களை இப்படி வெளிப்படையாக பேசுவதற்கே தில்லு வேணும் என்கின்றனர் பொதுவான சினிமா ரசிகர்கள்.
 
மொத்தத்தில் வலதுசாரி சிந்தனை உடையவர்களுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது இந்த ருத்ர தாண்டவம்.
திரைவிமர்சனம்..! - "ருத்ர தாண்டவம்" - என்ன கதை..? - என்ன பண்ணியிருக்காங்க..? திரைவிமர்சனம்..! - "ருத்ர தாண்டவம்" - என்ன கதை..? - என்ன பண்ணியிருக்காங்க..? Reviewed by Tamizhakam on September 30, 2021 Rating: 5
Powered by Blogger.