"கொடுத்து வச்ச கிளி.." - ஸ்ரேயாவின் கோவைப்பழ உதட்டை சுவைக்கும் கிளி - தீயாய் பரவும் வீடியோ..!


"எனக்கு 20, உனக்கு 18" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து அசத்தினார். 
 
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் ஸ்ரேயா. இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். அதன் பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா மீண்டும், திரையில் அதகளம் செய்ய உள்ளார். 
 
தனுஷ், மஞ்சுவாரியார் நடிப்பில் வெளியான அசுரன் படம், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அப்படத்தில் மஞ்சுவாரியார் நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ரேயா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கிட்ட தட்ட 10 வருடங்களாக, முன்னணி நடிகையாக நடித்து வந்த இவர், கடைசியாக நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக, AAA படத்தில் நடித்தார். ஏற்கனவே பட வாய்ப்புகள் இல்லாமல் கிடைத்த படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா, இந்த படம் தோல்வி அடைந்ததால், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக முடிவெடுத்தார்.
 
அதன் படி, ரஷ்யாவை சேர்ந்த காதலர் ஆண்ட்ரு என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு, பின்னர் திருமணம் குறித்து ரசிகர்களுக்கு அறிவித்தார். தற்போது தன்னுடைய கணவர் ஆண்ட்ருவுடன், ஸ்பெயினில் வசித்து வருகிறார் ஸ்ரேயா.
 
சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு சென்ற அவர் கோயிலுக்கு வெளியே கணவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட போது ஸ்ரேயாவுக்கு அவர் முத்தம் கொடுத்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.
 

 
இந்நிலையில், தற்போது கிளி ஒன்றுடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஸ்ரேயாவின் உதட்டை கோவைப்பழம் என நினைத்துக்கொண்டதோ என்னவோ தெரியவில்லை. அப்படி என்ன செய்கிறது அந்த கிளி என்று நீங்களே பாருங்க.

"கொடுத்து வச்ச கிளி.." - ஸ்ரேயாவின் கோவைப்பழ உதட்டை சுவைக்கும் கிளி - தீயாய் பரவும் வீடியோ..! "கொடுத்து வச்ச கிளி.." - ஸ்ரேயாவின் கோவைப்பழ உதட்டை சுவைக்கும் கிளி - தீயாய் பரவும் வீடியோ..! Reviewed by Tamizhakam on September 14, 2021 Rating: 5
Powered by Blogger.