தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது தொடர்ச்சியாக தங்கை வேடங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சிவா இயக்கத்தில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியின் தங்கையாகயாகவும், அடுத்ததாக வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘போலா ஷங்கர்’ சிரஞ்சீவியின் தங்கையாகவும் நடித்து வருகிறார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் அடக்க ஒடுக்கமாக நடித்து வரும் இவர் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.செல்வராகவன் கதாநாயகனாக அறிமுகமாகும் சாணிக்காயிதம் படத்திலும் நடித்து வருகிறார் கீரத்தி சுரேஷ்.
தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் படத்தில் உதவி இயக்குநராகவும், இறுதிச்சுற்று படத்தின் வசன எழுத்தாளராகவும் பணியாற்றியவர் அருண் மாதேஸ்வரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
கடந்த வருடம் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தாலும் இந்த வருடம் பிப்ரவரி மாதம் தான் படப்பிடிப்பு துவங்கியது.திரையுலகில் கவர்ச்சி காட்டினால் தான் நடிகையாக நீடிக்க முடியும் என்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு கீர்த்தி சுரேஷ் தன்னுடைய அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகி சுரேஷ் பப்ளியாக இருந்த தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக குச்சி போல் மாறினார்.
இதனையடுத்து தற்போது இவர் மிகவும் மாடர்ன் உடையில் கிழிந்த பேண்டுடன் ஏர்போர்ட்டுக்கு வந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. ஏர்போர்ட் விசிட்டிங் போது இவர் வைத்திருந்தார் Dior saddle-bag கைப்பையில் விலை மட்டும் சுமார் 2.5 லட்சம் என தெரியவந்துள்ளது.
0 கருத்துகள்