தமிழ் சினிமாவில் சரத்குமாருடன் ‘அர்ஜுனா அர்ஜூனா அம்பு விடும் அர்ஜுனா’ பாடல் மூலம் ரசிகர்களை கிறங்கடித்தவர் நமீதா. விஜயகாந்த், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். இவரை பார்த்திபன் ஜெர்சி பசு என்றெல்லாம் அழைத்தார். கவர்ச்சி பாமாக வலம் வந்த நமீதா உடல் எடை கூடியதால் சினிமா வாய்ப்புகளை இழந்தார்.
எனவே, சின்னத்திரை பக்கம் ஒதுங்கி மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு நடுவர்களில் ஒருவராக இருந்தார். திடீரென திருமணமும் செய்து கொண்டார். அதன்பின் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரமெல்லாம் செய்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் சில வருடங்கள் அமைதியாக இருந்த அவர் திடீரென பாஜகவில் இணைந்தார். தற்போது மீண்டும் சின்னத்திரையில் நடிக்க முடிவெடுத்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள சீரியல் மூலம் நடிகை நமீதா ரீ-என்ட்ரீ கொடுக்கவுள்ளார்.
அதேபோல், கலர்ஸ் தொலைக்காட்சியில் ‘கன்னித்தீவு’ என்கிற தொடரிலும் அவர் நடிக்கவுள்ளார். இதில் அவருடன் ரோபோ சங்கர், ஷகிலா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். கேப்டன் விஜயகாந்துக்கு ஜோடியாக "எங்கள் அண்ணா" என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா.
அதனை தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். மேலும் கவர்ச்சி புயலாக வலம் வந்த இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் திடீரென ஓவர் வெயிட் போட்ட நமீதாவிற்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.
படவாய்ப்புகள் இல்லாததால், காணாமல் போன நடிகைகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட நமீதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களிடையே மீண்டும் பிரபலமானார் நமீதா.
அதன் பின்னர் வீரேந்திர செளத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நமீதா, பொறுப்பான மனைவியாக செட்டில் ஆவார் என நினைத்தால், ஓவர் கிளாமரில் அதிரடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.