இந்த உடம்ப வச்சிக்கிட்டு பிகினி உடையா..? - ரசிகர்களை வாயடைக்க செய்த அனுஷ்கா..!

 
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், 2005-ல் வெளியான தெலுங்கு திரைப்படமான சூப்பரில் தொடங்கியது. தமிழில் சிங்கம், என்னை அறிந்தால், வேட்டைக்காரன், லிங்கா, தாண்டவம், இரண்டாம் உலகம் உட்பட இதுவரை பல்வேறு மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 
 
இவருடைய பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாகிய பாகுபலி, அருந்ததி, ருத்ரமாதேவி, தெய்வத்திருமகள் போன்ற திரைப்படங்கள் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது உட்பட பல விருதுகளை இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. 
 
பாகுபலியில் இவர் நடித்த தேவசேனா கதாப்பாத்திரம் இவருக்கு உலகெங்கும் ரசிகர்களை பெற்றுத்தந்தது என்றே கூறலாம். சைஸ் இஸ் ஜீரோ படத்திற்கு பிறகு குண்டாக மாறியதால், கடும் மன உழைச்சலில் இருக்கிறார் நம்ம அனுஷ்கா. 
 

இதனால், பட வாய்ப்புகளும் வரவில்லை, ஆனாலும் தமிழில் இருந்து வந்த கொஞ்ச நஞ்ச அழைப்புகளையும் நிராகரித்து விட்டார், என்ன என்று பார்த்தால், இங்கு எதோ ஒரு விஷயம் அவரை பயங்கர காயப்படுத்தி உள்ளதாக சொல்கிறார்கள். 
 
தற்போது புதிய தெலுகு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதனை ‘பாகமதி’ படத்தைத் தயாரித்த நிறுவனம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் தீயாக பரவி வந்தது. 
 
ஆனால் தற்போது, அதை எல்லாம் பொய் என மறுத்து, பிகினி போட சொன்னா கூட எனக்கு ஓகே என்று இன்றும் அதே கெத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார்.
 
மட்டுமில்லாமல் வெப் சீரிஸ் ஒன்றில் கமிட்டாகியுள்ள அனுஷ்கா, நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள், இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடையா..? என்று வாயைடைத்து போயுள்ளனர்.