"ஒஸ்தி" ஹீரோயினா இது..? - உடல் எடை கூடி.. நீச்சல் உடையில்.. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை ரிச்சா..!

 
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மயக்கம் என்ன படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ரிச்சா கங்கோபத்யாய. அதன் பிறகு அவர் சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் நடித்தார். பின்பு அவர் நடிப்பை நிறுத்தி விட்டு அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தார். 
 
கல்லூரியில் படித்தபோது அவருக்கும், சக மாணவரான ஜோ லாங்கெல்லா என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.தெலுங்கு திரையுலகில் ஏராளமான படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். 
 
இவர், தமிழில், சிம்பு உடன் ‘ஒஸ்தி’, தனுஷ் உடன் ‘மயக்கமென்ன’மற்றும் படங்களிலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் இவருக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. இதனால் இவர் நடிப்புக்கு முழுக்குப்போட்டுவிட்டு வாஷிங்டன் பல்கலையில் எம்பிஏ பட்டப்படிப்பு படிக்க சென்றுவிட்டார். 
 
இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தனது கர்ப்பத்தை அறிவித்தார் ரிச்சா. தற்போது மே 27 ம் தேதியன்று தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாக ரிச்சா அறிவித்துள்ளார். அந்த குழந்தைக்கு லுகா ஷான் லங்கீலா என பெயரிட்டுள்ளதாகவும் ரிச்சா குறிப்பிட்டுள்ளார். 
 
 
தனது குழந்தையின் அழகிய ஃபோட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரிச்சா, எங்கள் சந்தோஷத்தின் அடையாளமாக லுகா ஷான் லங்கீலா மே 27 அன்று இந்த உலகில் அடியெடுத்து வைத்துள்ளான். 
 
 
அம்மாவும், அப்பாவும் சிறப்பாக கவனித்துக் கொள்கிறார்கள் என்று கூறியிருந்தார் அம்மணி. இந்நிலையில், தற்போது கணவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.


இதனை பார்த்த ரசிகர்கள், என்னங்க ஆள் அடையாளம் தெரியாம மாறிட்டீங்க..? ஒஸ்தி ஹீரோயினா இது..? என்று ஷாக் ஆகி வருகிறார்கள்.