வெளியானது "சிவகுமாரின் சபதம்" ட்ரெய்லர்..! - தேறுமா..? தேறாதா..?


ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள 'சிவகுமாரின் சபதம்' படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. 'நான் சிரித்தால்' படத்துக்குப் பிறகு, ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிவகுமாரின் சபதம்'. 
 
இதில் நாயகனாக மட்டுமன்றி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், முதல் பிரதி அடிப்படையில் தயாரிப்பு என அனைத்துமே ஹிப் ஹாப் ஆதிதான். இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் வழங்கியுள்ளது. 
 
இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ட்ரெய்லர் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், படத்திலிருந்து ஒவ்வொரு பாடலாக இதுவரை 5 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 
 
தற்போது படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
 

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்