சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா சிங். இவர் ஒரு குத்துச்சண்டை வீராங்கை ஆவார். அப்படத்திற்கு பின் சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
குறிப்பாக ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.மேலும் இவருக்கு இப்படத்தில் இதன் மூலம் தேசிய விருதும் கிடைத்தது. அதனை தொடர்ந்து ரித்திகா சிங் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் சிவலிங்கா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து பிஸியாக இருந்தார். இதனை தொடர்ந்து இறுதியாக வாணி போஜன், அசோக் செல்வனுடன் இணைந்து ஓ மை கடவுளே என்ற மிகப்பெரிய ஹிட் படத்திற் கொடுத்தார்.
ஆனால் சமீப காலமாக இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் பெரிய அளவில் கிடைக்கவில்லை. இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அருண் விஜய்யின் பாக்சர் படத்திலும், வணங்காமுடி எனும் படத்தில் அவர் நடிக்கிறார். இந்நிலையில ரித்திகா மீண்டும் கிக் பாக்சிங்கில் அதிக கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
இதை பார்த்த அவரது ரசிகர்கள், ரித்திகா சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு மீண்டும் பாக்சிங் செய்ய போறீங்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.