வெளியானது வெறித்தனமான "ருத்ர தாண்டவம்" ஸ்பாட்லைட் காட்சிகள் - அதிரும் இண்டர்நெட்..!


ரிஷி ரிச்சர்டு நடித்த ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், இயக்குனர் கவுதம் மேனன், ராதாரவி, மாளவிகா அவினாஷ்,தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
 
படத்தின் டிரைலர் வெளியான போதே இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளப்பிய நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்திற்கு எதிர்ப்பு வலுக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
ஜி.எம். ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், ஒருதரப்பினர் மத்தியில் இப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் நிலவிய போதிலும், வணிகரீதியாக இப்படம் கணிசமான வெற்றியைப் பெற்றது.
 
திரௌபதி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இக்கூட்டணி ருத்ர தாண்டவம் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் ரிஷி ரிச்சர்டு நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா நடித்துள்ளார். 
 
ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜீபின் இசையமைத்துள்ள இப்படத்திற்கு யூ/ஏ தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது.
 
மேலும், இப்படத்தின் தமிழக உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் வெறித்தனமான மேக்கிங் வீடியோ சற்று முன் இணையத்தில் வெளியிடப்பட்டு இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

வெளியானது வெறித்தனமான "ருத்ர தாண்டவம்" ஸ்பாட்லைட் காட்சிகள் - அதிரும் இண்டர்நெட்..! வெளியானது வெறித்தனமான "ருத்ர தாண்டவம்" ஸ்பாட்லைட் காட்சிகள் - அதிரும் இண்டர்நெட்..! Reviewed by Tamizhakam on September 20, 2021 Rating: 5
Powered by Blogger.