ஆத்தாடி... எத்தாதண்டி... - மலைக்க வைத்த சீரியல் நடிகை கிருத்திகா..!

 
தமிழ் டிவி நடிகைகளில் சீனியர் கிருத்திகா .ஹீரோயினக வந்துள்ளார் வில்லியாக கலக்கியுள்ளார் .நல்லவராகவும் வந்துள்ளார் கெட்டவராகவும் நடித்துள்ளார். மெட்டி ஒலி சீரியலில் மறக்க முடியாத கேரக்டரில் வந்து அசத்தியவர்தான் கிருத்திகா .இன்று வரை இவருக்கு நல்ல கிராக்கி இருக்கிறது டிவி உலகில். 
 
பாண்டவர் இல்லம் சீரியலில் கலக்கல் வில்லியாக வலம் வரும் கிருத்திகா, இன்ஸ்டாவிலும் பிரமிக்க வைக்கிறார் .அவ்வப்போது போஸ்ட் போடுவதில் வல்லவரான இவர் டான்ஸிலும் பின்னி எடுப்பார் .அதிலும் இவரது டப்ஸ்மாஷ் டான்ஸ்கள் ரொம்பவே பிரபலமானவை. 
 
அத்தனையும் வைரலாக போனவை. முன்பு குண்டாக இருப்பார் கிருத்திகா .பிறகு கடுமையாக உழைத்து உடம்பைக் குறைத்து இளைத்துப் போய் என்னைப் பார் என் அழகைப் பார் என்று புகைப்படம் போட்டு அனைவரையும் கிறுகிறுக்க வைத்தார் .
 
ஒல்லி பெல்லியாக மாறிய பிறகு இவர் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை. அப்படி வீடியோ போட்டு கலக்குகிறார் கிருத்திகா.சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆன மெட்டி ஒலி தொடரில் அருந்ததி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். 
 
 
தொடர்ந்து ஆனந்தம், ஆடுகிறான் கண்ணன், கணவருக்காக, செல்லமே, முந்தாணை முடிச்சு என அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து நல்ல ரீச் ஆனார். அதன்பின்னர் திருமணமாகி 3 வருடங்கள் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார். 
 
 
நீண்ட இடைவெளிக்கு பிறகு மரகத வீணை, கேளடி கண்மணி, வம்சம், செல்லமே, செல்லமடி நீ எனக்கு, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், என் இனிய தோழியே, பாசமலர், ரேகா ஐபிஎஸ், கல்யாண பரிசு போன்ற தொடர்களில் நடித்தார். 


சமீப காலமாக இணையத்தில் ஆக்டிவாக வலம் வரும் இவர் தற்போது பெரிய பெரிய நகைகளை அணிந்து கொண்டு தங்க சிலையாக நிற்கும் சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி எத்தாத்தண்டி... நகைங்க.. என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

ஆத்தாடி... எத்தாதண்டி... - மலைக்க வைத்த சீரியல் நடிகை கிருத்திகா..! ஆத்தாடி... எத்தாதண்டி... - மலைக்க வைத்த சீரியல் நடிகை கிருத்திகா..! Reviewed by Tamizhakam on September 06, 2021 Rating: 5
Powered by Blogger.