"ஊரு சனம் தூங்கிருச்சு.. ஊத காத்தும் அடிசிருச்சு.." - கிறங்கடிக்கும் கஸ்தூரி..!


நடிகை கஸ்தூரி ட்விட்டரில் சமூக கருத்துக்கள், அரசியல் விமர்சனங்கள் மற்றும் மொழி சம்மந்தமான கருத்துக்களை அன்றாடம் பகிர்ந்து வருகிறார். இவர் போடும் ட்வீட்டுக்கு பலரும் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருவது வழக்கம். 
 
அந்த வகையில் பல சர்ச்சையான கேள்விகளுக்கும் இவர் பதிலடி கொடுத்து ட்வீட் போட்டும் வருகிறார்.தற்போதும் சினிமாவில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி, குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி வருகிறார். 
 
வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் கஸ்தூரி தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார் கஸ்தூரி. 
 
1992ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டத்தை தட்டியவர் கஸ்தூரி.ஷங்கர் இயக்கத்தில் வெளியான கமலின் இந்தியன் படத்தில் வயதான கமலுக்கு மகளாகவும், இளம் கமலுக்கு தங்கையாகவும் நடித்தர் கஸ்தூரி. 
 

 
இந்நிலையில், ஊருசனம் தூங்கிருச்சு என்ற பாடலை தன்னுடைய குரலில் பாடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

"ஊரு சனம் தூங்கிருச்சு.. ஊத காத்தும் அடிசிருச்சு.." - கிறங்கடிக்கும் கஸ்தூரி..! "ஊரு சனம் தூங்கிருச்சு.. ஊத காத்தும் அடிசிருச்சு.." - கிறங்கடிக்கும் கஸ்தூரி..! Reviewed by Tamizhakam on September 21, 2021 Rating: 5
Powered by Blogger.