வாணி போஜன் தமிழ் தொலைக்காட்சிகளை நாடகங்களில் நடித்து வந்து, சின்னத்திரை டூ வெள்ளித்திரையில் திறமை காட்டி வரும் நடிகை. இவர் சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள், ரசிகர்கள் இடையே வரவேற்பு பெற்றுள்ளன.
நடிகை வாணி போஜன் தற்சமயம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களில் நடித்து வருகிறார். இவரது ஹோம்லியான லுக், பக்கத்து வீட்டு பெண் தோற்றம் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாக காரணமாக இருக்கிறது. மேலும், தற்சமயம் மேக்கப் இல்லாமலும், கொள்ளை அழகில் தோற்றமளிக்கும் ஒருசில நடிகைகளில் வாணி போஜனும் ஒருவர்.
கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கில்லியாக பயன்படுத்தி கொண்டு, தன்னுடைய நடிப்பு திறமையால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் முனைப்பு கட்டி வருகிறார் வாணி போஜன்.
நடிகர் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடித்த, 'ஓ மை கடவுளே' படத்தில் இவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தாலும், ஹீரோயினாக நடித்த ரித்திகா சிங்கை விட இவர் கை வசம் தான் அதிக படங்கள் உள்ளது.
அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு, ஹீரோயின் ரித்திகா சிங்கை தூக்கி சாப்பிடும் அளவிற்கு அழகாலும், எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்ற துவங்கிவிட்டார்.
'ஓ மை கடவுளே' படத்தை தொடர்ந்து, வைபவுக்கு ஜோடியாக வாணி நடித்து ஓடிடி தளத்தில் வெளியான, லாக்அப் படத்திற்கு, கலவையான விமர்சனங்களே கிடைத்தது.
இந்நிலையில், டீசர்ட்டை தூக்கி கட்டிக்கொண்டு தன்னுடைய இடை அழகை காட்டும் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
0 கருத்துகள்