"கண்ணு கூசுதே.." - ஜொலிக்கும் அழகை வெளிச்சம் போட்டு காட்டிய நேகா கவுடா..!

 
சன் டிவியில் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றி நடைபோட்ட கல்யாண பரிசு தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நேஹா கவுடா, தற்போது விஜய் டிவியின் பாவம் கணேசன் தொடரில் நடித்து வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த இவர், ஒரு சில கன்னட தொடர்களில் நடித்துள்ளார். 
 
மேலும் தமிழில் சன்டிவியில் ஒளிபரப்பாக கல்யாணப்பரிசு சீரியல் மூலம் அறிமுகமான இவர், சூப்பர் சேலஞ்ச என்ற நிகழ்ச்சியில் கெஸ்ட்டாக கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் தொடரில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். 
 
தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியல் நடிகைகள் பலர் நடிப்பினாலும், சமூக வலைதள படங்களாலும் ரசிகர்களிடையே நெருக்கமாவார்கள். அப்படியானவர் தான் நடிகை நேகா கவுடா.
 
 
பத்தாம் வகுப்பு படிக்கும் போதே தியேட்டர் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்திருக்கிறார் நேகா. படித்து முடித்த பிறகு தான் சினிமாவில் நுழைய வேண்டும் என வீட்டில் சொல்ல, அதன்படி சமர்த்தாக படித்தாராம். பிகாம் படிப்பை முடித்த பிறகு நடிப்பு வேட்டையை தொடங்கியிருக்கிறார். 
 
 
2013-ல் ஒரு கன்னட சீரியல் தான் நேகாவுக்கு நடிப்புலக கதவை திறந்திருக்கிறது. அதற்கு பிறகு தான் கல்யாண பரிசு சீரியலில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்ததாம்.நேகாவுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் கூட தமிழ் பேச தெரியாது. இருந்தாலும் கல்யாணப்பரிசு சீரியல் டீம் இவருக்கு நல்ல சப்போர்ட் பண்ணி இருக்காங்க. 


அதனால ஒத்துக்கிட்டாங்களாம். இப்போ அந்த சீரியல் மூலமாக தனக்கென்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கிறார். இந்த சீரியல் ஒரு முக்கோணக் காதலை மையமாகக் கொண்டது. இவருக்கு அழகே அந்த உதடுக்கு கீழ் உள்ள ஒரு மச்சம் தான் அதைவிட ஸ்லீவ் லெஸ் உடையில் மரத்தில் சாய்ந்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கொடுத்துள்ளார்.