துளி மேக்கப் இல்லாமல் சேலையை பறக்க விட்டு.. புன்னகை பூவாய் சாய்பல்லவி..! - உருகும் ரசிகர்கள்..!

 
திரையுலக வரலாற்றில் ஒரே படத்தில் காணாமல் போன நடிகைகள் பலர் உண்டு. அப்படியிருக்க, முதல் படத்திலேயே ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைக் கலைஞராக வலம் வரும் வாய்ப்பு என்பது எல்லோருக்கும் எளிதாக கிடைத்துவிடுவதில்லை. 
 
ஆனால், ஒரே படத்தில் ஓஹோ என ஹிட்டடித்தவர் சாய் பல்லவி. 2015-ஆம் மலையாளத்தில் சக்கைப் போடு போட்ட 'பிரேமம்' படம் மூலமாக தென்னிந்திய திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அந்தப் படத்தில் மலர் டீச்சராக நடித்து மலையாளத்தில் மட்டுமில்லாது, தமிழ், தெலுங்கு ரசிகர்களையும் முதல் படத்திலேயே தன் வசப்படுத்தினார். 
 
இந்தப் பயணத்தில் அவருக்கு உறுதுணையாக இருப்பதில், அவரது நடனத் திறனும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது சமீபத்திய 'யூடியூப் ஹிட்ஸ்'களே சான்று. மலர் டீச்சராக வந்த சாய் பல்லவியை முதலில் அனைவரும் யாரோ மலையாள நடிகை என்றுதான் நினைத்தனர். 
 
ஒரு படத்தில் ஒரு நடிகையை பிடித்துவிட்டால், அவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கத்தான் ரசிர்களால் முடியாதே. அப்படியொரு கியூரியாசிட்டியோடு தேடி அலைந்தவர்களுக்கு கிடைத்தது, ஓர் அடடே அப்டேட். 'இது நம்ம கோத்தகிரிக்காரப் பொண்ணுப்பா' என சாய் பல்லவியை தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர். 
 
 
தமிழில் சாய் பல்லவி மாரி 2 படத்தில் தனுஷுடன் சேர்ந்து சாய் பல்லவி ரவுடி பேபி பாடலுக்கு போட்ட ஆட்டம் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே அதிர வைத்தது. அதன் பின்னர் சூர்யாவுடன் என்.ஜி.கே.படத்திலும் நடித்தார். 
 
 
கண்டமேனிக்கு தன்னை தேடி வரும், அனைத்து கதைகளிலும் நடிக்காமல், தன்னைக்கு எப்படி பட்ட கதாபாத்திரம் பொருத்தமாக இருக்கும், என்பதை தேர்வு செய்து நடித்து அசத்தி வருவது தான் சாய் பல்லவியின் பலம் என்று கூறலாம்.


தற்போது சாய் பல்லவி, துளியும் மேக்அப் இல்லமா அழகிய ஆரஞ்சு கலர், சேலையில... வெளியிட்டுள்ள புகைப்படம் இப்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

துளி மேக்கப் இல்லாமல் சேலையை பறக்க விட்டு.. புன்னகை பூவாய் சாய்பல்லவி..! - உருகும் ரசிகர்கள்..! துளி மேக்கப் இல்லாமல் சேலையை பறக்க விட்டு.. புன்னகை பூவாய் சாய்பல்லவி..! - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 04, 2021 Rating: 5
Powered by Blogger.