நம்ம பிரபுவா இது..? - உடல் எடை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..!

 
வெகுவாக உடல் எடையைக் குறைத்துள்ள நடிகர் பிரபுவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே கொழுக் மொழுக் தோற்றத்தில் இருந்தவர் நடிகர் பிரபு. 90-களில் இவர் நடித்த படங்கள் அதிகளவில் வெற்றியைக் குவித்தன. 
 
இருப்பினும் நாளடைவில் எடை அதிகரித்த அவர், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். இதனால் பிரபுவின் ரசிகர்கள் சற்றே கவலையில் ஆழ்ந்தனர். 
 
தற்போது அவர்கள் ஆச்சரியப்படும் விதமாக, நடிகர் பிரபு தனது உடல் எடையை 20 கிலோவுக்கு மேல் குறைத்துள்ளார். அவரது இந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷன், பிரபுவுக்கு அழகான மற்றும் மெலிதான தோற்றத்தைக் கொடுத்துள்ளது. 
 
 
இருப்பினும், அவர் எடையைக் குறைத்ததற்கு வலுவான காரணம் உள்ளது.அதற்கு காரணம் மணிரத்னம் தான். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
 
படத்தில் அநிருத்தப் பிரம்மராயர் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக தனது எடையைக் குறைக்க நினைத்த அவர் பொன்னியின் செல்வன் படத்திற்காக குறைத்துள்ளார். 


இதற்காக உடற்பயிற்சி செய்துள்ள அவர் சில இயற்கை முறைகளையும் உணவு உணவையும் பின்பற்றியுள்ளார். பிரபுவின் புதிய லுக்கைப் பார்க்கும் ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். விஷால் தற்போது வினோத் இயக்கத்தில் நடித்து வரும் விஷால் 32 படத்திலும் பிரபு இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நம்ம பிரபுவா இது..? - உடல் எடை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..! நம்ம பிரபுவா இது..? - உடல் எடை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..! Reviewed by Tamizhakam on September 28, 2021 Rating: 5
Powered by Blogger.