இந்தப் புன்னகையில் முன்பு பொன் நகைகள் எதுவும் தேவை இல்லை என்று ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் பிரியங்காவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அசந்து போய் விட்டார்கள்.என்னதான் இவர் அமைதியாக உட்கார்ந்தாலும் இவரை வம்பிழுக்க நெட்டிசன்கள் நாங்க வரோம் என்று ஓடோடி வருகின்றனர்.
வராத சிரிப்பை வலுக்கட்டாயமாக வரவழைத்து போஸ் கொடுத்துள்ளாரோ..!! என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை போஸ்ட் செய்துள்ளார் பிரியங்கா. பற்றாக்குறைக்கு பச்சை கலர் ட்ரெஸ் வேறு....எந்த நிகழ்ச்சியாக இருக்குமோ? எந்த இடமாக இருக்குமோ?என்று போட்டோவையே அவரது ரசிகர்கள் உற்று உற்றுப் பார்த்து வருகின்றனர்.
பொதுவாக விஜய் டிவியை பொறுத்தவரை நிகழ்ச்சி நன்றாக இருக்கிறதோ இல்லையோ அதை பொதுமக்களிடம் ரீச் ஆகும் வண்ணம் கொண்டு சேர்ப்பதற்கு அவர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.பொதுவாக ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும் விஜே க்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை கலாய்ப்பது தான் வழக்கம்.
ஆனால் நிகழ்ச்சியின் கன்டஸ்டன்ட்களே விஜே வை கலாய்ப்பது என்பது பிரியங்கா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் மட்டுமே நடைபெறும் ஒரு விஷயமாகும்.கண்டஸ்டன்டுகள் மட்டுமின்றி நடுவர்கள் கலாய்த்தாலும் அதையே நகைச்சுவையாக மாற்றி நிகழ்ச்சியை சலிப்பு தட்டாமல் கொண்டு செல்லும் அளவிற்கு ஒரு பக்குவமான விஜே வாக ஜொலித்து வருகிறார்.
பெரும்பாலும் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் ப்ரமோக்கள் இவரை மையப்படுத்தியே இருக்கும்.அந்த அளவிற்கு தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளார்.
இந்நிலையில், பச்சை நிறத்தினால் ஆன டைட்டான உடையில் சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னா கும்மு.. செம்ம ஹாட் என்று வர்ணித்து வருகிறார்கள்.