ஆறாவது போட்டியாளராக பிக்பாஸ் 5-ல் நுழைந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரபலம்..!

 
பிக்பாஸ் சீசன் 5 தொடருக்கான போட்டோஸ் வெளியாகி இருக்கிறது. இந்த சீசனுக்கான வீடு எப்படி இருக்கும் என்ற போட்டோஸ் வெளியாகி உள்ளது. சர்வதேச அளவில் கவனம் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 வருடமாக தமிழ்நாட்டிலும் நடத்தப்பட்டு வருகிறது. 
 
தமிழ்நாட்டில் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி உள்ளது. இந்த நிலையில் 5வது சீசன் தொடங்க உள்ளது. இன்று தொடங்கும் 5வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 
 
இந்த சீஸனின் புரோமோ ஏற்கனவே வெளியாகிவிட்டது. கமல் பேசும் பல்வேறு புரோமோ வெளியாகி ஏற்கனவே எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கிறது. இன்று இந்த சீசனில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளனர். 
 
 
இதனால் அறிமுக நிகழ்ச்சி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 தொடருக்கான போட்டோஸ் வெளியாகி இருக்கிறது. இந்த சீசனுக்கான வீடு எப்படி இருக்கும் என்ற போட்டோஸ் வெளியாகி உள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக, புதிய தோற்றத்தோடு இந்த பிக்பாஸ் செட் இந்த முறை கட்டப்பட்டு உள்ளது. 
 
ஒவ்வொரு முறையும் இந்த வீடு ஒரு தீமை மையமாக வைத்து வடிவமைக்கப்படும். இந்த முறை முழுக்க முழுக்க பசுமையை மையமாக வைத்து பச்சை நிறத்தில் வெளிப்பகுதியான கார்டன் ஏரியா வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், இசைவாணி, ராஜு, அபிஷேக், மதுமிதா, நமிதா மாரிமுத்து-வை தொடர்ந்து ஆறாவது போட்டியாளராக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக பிரியங்கா தேஷ்பாண்டே நுழைந்துள்ளார்.
ஆறாவது போட்டியாளராக பிக்பாஸ் 5-ல் நுழைந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரபலம்..! ஆறாவது போட்டியாளராக பிக்பாஸ் 5-ல் நுழைந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரபலம்..! Reviewed by Tamizhakam on October 03, 2021 Rating: 5
Powered by Blogger.