2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் "பிரேமம்". இந்தப்படம் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. "பிரேமம்" படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது.
பக்கா தமிழ் பெண்ணான சாய் பல்லவி டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழில் கரு படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, அடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்திலும் சூர்யாவுடன் என்ஜிகே படத்திலும் நடித்தார்.
மாரி 2 படத்தில் தனுஷுடன் சேர்ந்து சாய் பல்லவி ரவுடி பேபி பாடலுக்கு போட்ட ஆட்டம் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே அதிர வைத்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சிறப்பாக வலம் வரும் சாய்பல்லவி தற்போது தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றுவதில் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார் நடிகை சாய்பல்லவி.
ஆனால் இவருக்கு முதன்முதலில் டாக்டராக வேண்டும் என்ற எண்ணம்தான் தோன்றியது. ஆனால் அது நிறைவேறாத காரணத்தினால் நடனத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் அது போக போக பின்னாட்களில் சினிமாவுக்கு இழுத்துச் செல்ல தற்போது ஹீரோயினாக பல மொழிகளில் நடித்து வருகிறார்.
தமிழில் இவர் தனுசுடன் மாரி 2, சூர்யாவுடன் என்ஜிகே ஆகிய படங்களில் நடித்ததால் தற்போது தமிழ் சினிமாவில் அவரது மார்க்கெட் எகிறி உள்ளது. அதனால் தனது சம்பளத்தை கோடிகளில் ஏற்றுக்கொண்டு தற்போது சிறப்பாக பயணிக்கிறார் இப்படி இருக்க இவரை தொடர்ந்து அவரது தங்கையும் சினிமாவில் வலம் வர உள்ளார் என்ற தகவல் உலா வருகிறது.
இவர் பிரபல நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி நடிக்கும் ஒரு படத்தில் அவருடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.போதுவாக சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் சாய் பல்லவியின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகின்றது.
Tags
Sai Pallavi