ப்ப்பா.. அவங்களா இது..? - அரண்மனை கிளி நடிகை வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..!

 
நடிகை பிரகதி 1994ம் ஆண்டு வெளியான பாக்யராஜின் “வீட்ல விசேஷங்க” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு, நடிகை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
விஜயகாந்துடன் “பெரிய மருது”, பாண்டியராஜனுடன் “சும்மா இருங்க மச்சன்”உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்திய நாட்களில், அவர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனின் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். 
 
 
உதயநிதியின் “கெத்து”, சசி குமாரின் “தார தப்பட்டை”, சந்தானத்தின் “இனிமே இப்படித்தான்” ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே சமீப காலமாக சமூக வலைத்தளங்களிலும் அக்டிவாக இருக்கிறார். 
 
 
குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார். மேலும் அவர் தான் வேலை செய்வது, உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார். 
 
 
இதனால் நாளுக்கு நாள் இவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. தற்போது ஏறக்குறைய 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின்தொடர்ந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது மகனுடன் வாத்தி கம்மிங் என்ற விஜய் பட பாடலுக்கு நடனமாடி ஷேர் செய்திருந்த வீடியோ வைரலானது. 
 
இந்நிலையில், இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. 
 
இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுலயும் இப்படியா..? "இனிமே இப்படித்தான்" படத்துல சந்தானத்துக்கு ஹீரோயினா நடிச்சவங்களா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.