நீச்சல் உடையில் "கண்ணான கண்ணே" சீரியல் நடிகை நித்யா தாஸ்..! - ஷாக் ஆன ரசிகர்கள்..!

 
மலையாள, திரைப்படங்களில் அறிமுகமாகி, தற்போது சீரியல் நடிகையான மாறி இருப்பவர் நித்யா தாஸ், தமிழிலும் 'பொன் மேகலை' மற்றும் 'மண்ணோடு மழைக்காலம்' ஆகிய படங்களில் நடித்தார். 
 
இவர் நடத்த படங்கள் பெரிதாக வெற்றி பெறாததால் சீரியலின் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பினார்.மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் சில படங்களிலும், முன்னணி சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர். 
 
தமிழில் ஷ்யாம் நடித்த 'மனதோடு மழைக்காலம்' படத்தில் கதநாயகியாக அறிமுகமான நித்யா, சன் டிவியில் 'இதயம்', 'பைரவி' ஆகிய தொடர்களில் நடித்து தமிழ்நாட்டு மக்களின் வீடுகளில் சென்று சேர்ந்தார். 
 
 
தற்போது சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான 'கண்ணான கண்ணே' தொடரில் யமுனா கதாபாத்திரத்தில் நாயகியின் அம்மாவாக நடித்து வருகிறார். 36 வயதாகும் நித்யா உண்மையில் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இருப்பினும் தற்போதைய கதநாயகிகளுக்கு சமமாக இளமை கொஞ்சும் அழகுடன் வலம் வருகிறார். சீரியல் நடிகைகளில் நிறைய பேர் சின்ன வயதிலேயே அம்மா ரோல்களில் நடிக்க வந்து விடுவார்கள். 
 
 
ஆனால் நிஜத்தில் அவர்கள் படு இளமையாக மிக குறைந்த வயதில் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது நடிகை நித்யா தாஸும் சீரியல் அம்மாவாகியிருக்கிறார். 
 
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். 
 

அந்த வகையில், தற்போது குடும்பத்தினருடன் நீச்சல் உடையில் ஆனந்த குளியல் போடும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.