நடிகை சுஜா வருணி, ஒரு சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கு பெற்றதால், மக்களிடத்தில் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் பள்ளிக்கூடம், கிடாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் இவர்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 1-ல் பாதியில் போட்டியாளராக பங்கேற்று இறுதிவரை பயணித்த புகழுக்கு சொந்தக்காரர் சுஜா வருணி.இவர் தமிழில் பல படங்களில் நடித்தும் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி இருந்த போதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாகவே மக்களிடையே தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார்.
36-வயதான சுஜா 2002-ல் பிளஸ் டூ எனும் திரைப்படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கினார்.அதன்பின் தமிழ்,கன்னடம்,மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்திருந்தாலும் கதாநாயகியாக சில படங்களிலேயே நடித்திருந்தார்.
பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களிலும் கவர்ச்சியாக நடனமாடும் ஒரு பாடல் நாயகியாகவுமே படங்களில் தோன்றி வந்தார்.மேலும் வெகு சில படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார்.தமிழில் 2010-ல் வெளியான மிளகா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
மேலும், இவர் நடித்த முதல் திரைப்படம் அந்த அளவிற்கு இவருக்கு கை கொடுக்கவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். இதனால் இனி இந்த ஃபீல்ட் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த இவர் மறுபடியும், கலக்கலான டான்ஸ் மூலம் சினிமாவில் ஜெயிக்கலாம் என்று மீண்டும் களம் இறங்கினார்.
பல படங்களில் ஒரு பாட்டுக்கு அதுவும் கவர்ச்சி ஆட்டம் போட்டு ரசிகர்களை சுண்டி இழுத்தார். சுஜா வருணி. இவர் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்து கொண்டார்.
குழந்தை பிறந்த பின்னர் தற்போது உடம்பை குறைத்து அழகாக மாறி உள்ளார் இவர். மேலும் தற்போது பாறைக்கு நடுவில் தொடை தெரியும்படி இருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.
Tags
Suja varunee