கோல்டன் டைமை வீணடித்த புனித் ராஜ்குமார்..! - சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா..?

 
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாக திகழ்பவர் புனித் ராஜ்குமார். சென்னையில் பிறந்தவரான இவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் தந்தையும் புகழ்பெற்ற நடிகருமான ராஜ்குமார் சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனால் கடத்தப்பட்டு காட்டில் பணைய கைதியாக வைக்கப்பட்டிருந்தார்.
 
இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு திடீரென மரடைப்பு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் இன்று காலை 11.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஜாம்பவான் நடிகர் ராஜ்குமார். 
 
அவருக்கு மூன்று மகன்கள். மூன்று பேருமே திரைத் துறையில் இருந்தாலும் கூட இரண்டாவது மகன் சிவராஜ்குமார் மற்றும் கடைசி மகன் புனித் ராஜ்குமார் ஆகிய இருவரும் மிகப் பெரிய ரசிகர் வட்டத்தை கொண்ட சூப்பர்ஹிட் நடிகர்கள். இன்று காலை புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 
 
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் புனித் ராஜ்குமார் மரணம் அடைந்தார். 46 வயது நிரம்பிய புனித் ராஜ்குமார் பாரம்பரியமான சினிமா குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் தந்தை ராஜ்குமார் பிரபல கன்னட நடிகர். இவரின் அண்ணன் சிவ ராஜ்குமாரும் பிரபல நடிகர்.
 
சினிமா உலகில் பிட்டாக இருக்கும் நடிகர்களில் புனித் ராஜ்குமாரும் ஒருவர். தனது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த கூடியவர். துடிப்பான நடனம், ஜிம் உடற்பயிற்சி, சண்டை பயிற்சி என்று மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒருவருக்கு இப்படி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பிறகு மருத்துவமனைக்கு தாமதமாக அழைத்துச் வரப்பட்டார், அவருடைய கோல்டன் டைமை அவர் வீணடித்து விட்டார். இதுதான், அவரது உயிரை காப்பாற்ற முடியாமல் போனதற்கு காரணம். மருத்துவரின் பேட்டியும் இதை உறுதி செய்துள்ளது. 
 
நெஞ்சு வலி ஏற்பட்ட உடன் அருகில் வழக்கமாக செல்லும் கிளீனிக்கிற்கு சென்ற புனித் ராஜ்குமாருக்கு ECG எடுக்கப்பட்டுள்ளது. இதனை சோதித்த மருத்துவர், உடனடியாக பெரிய மருத்துவமனையில் சேர்ந்து எக்கோ எடுத்து பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 
 
இதனை தொடர்ந்து, அருகில் இருந்த பெரிய மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுயநினைவை இழந்துள்ளார் புனித் ராஜ்குமார். மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே புனித் ராஜ்குமார் உயிரிழந்து விட்டார் என்பதை அறிந்த மருத்துவர்கள் மீண்டும் பல்ஸ்-ஐ துடிக்க வைக்க CPR செய்தும் பலனில்லை. 
 
 
இதனை தொடர்ந்து புனித் ராஜ்குமார் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இவருடைய சொத்து மதிப்பும் மற்றும் 1,700 கோடியை தாண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.
கோல்டன் டைமை வீணடித்த புனித் ராஜ்குமார்..! - சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா..? கோல்டன் டைமை வீணடித்த புனித் ராஜ்குமார்..! - சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா..? Reviewed by Tamizhakam on October 29, 2021 Rating: 5
Powered by Blogger.