ஜீவா படத்தில் திவ்யாவின் தங்கையாக துறுதுறுவென நடித்த சிறுமியை ஞாபகம் இருக்கிறதா? அவர் தான் தற்போது டைம் இல்ல படம் மூலம் நாயகியாகியிருக்கும் மோனிகா சின்னகொட்லா. தற்போது, தமிழில் டைம் இல்லா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த படம் குறித்து பேசிய அவர், டைம் இல்ல திரைப்படம் எனக்கு 4வது படம். இந்த படத்தில் பள்ளி மாணவியாகவும், ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்ணாகவும் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன்.
இந்த படம் ஒரு காதல் காமெடி படம். அதனால் எனக்கும் ஹீரோவுக்கும் இடையேயான காதல் காட்சிகள் காமெடியாக இருக்கும்.தொடர்ந்து பள்ளி மாணவியாகவே நடித்து வந்தேன்.
ஜீவா, ஜீனியஸ் என இதற்கு முன்பு நான் நடித்த படங்களிலும், பள்ளி மாணவியாக தான் நடித்தேன். நான் சின்ன பெண்ணாக இருப்பதால், இந்த ரோல் எளிதாக செட்டாகிவிட்டது. தற்போது 8 தோட்டாக்கள் படக்குழுவுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன்.
அந்த படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன்.இயக்குனர் சுசிந்திரன் தான் ஜீவா படம் மூலம் என்னை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார். எனக்கு அவர் குரு மாதிரி. எனவே எந்த சந்தேகமாக இருந்தாலும் அவரிடம் தயங்காமல் கேட்டுவிடுவேன்.
சுசிந்திரன் சார் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கிறார் என்று கூறினார். இந்நிலையில், தற்போது பட வாய்ப்புக்காக முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் படு சூடான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், செதுக்கி வச்ச ஜிலேபி.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.
Tags
Monica Chinnakotla