90களில் பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை பிரகதி. அவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். தெக்கத்தி பொண்ணு, வம்சம், அரண்மனை கிளி என பல சீரியல்களில் அவர் நடித்துள்ளார்.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘அரண்மனைக்கிளி’ சீரியலை யாரும் மறந்திருக்க முடியாது. அதில் ஹீரோவின் அம்மா மீனாட்சியாக நடித்திருந்தவர் நடிகர் பிரகதி. சீரியலில் மட்டுமல்ல பல திரைப்படங்களில் ஹீரோயினாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
‘திரைக்கதை மன்னர்’ இயக்குநர் பாக்யராஜின் ‘வீட்ல விசேஷங்க’ திரைப்படம் மூலமாகத் தமிழுக்கு நாயகியாக அறிமுகமானார் பிரகதி. அறிமுகப்படம் வெற்றிப்படமாகவே அமைந்த போதிலும் அடுத்தடுத்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை.
ஆகையால் சோர்வுடன் போராடிக் கொண்டிருந்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு சீனியர் காமெடி நடிகர் ஒருவர் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் காலையில் இந்த சம்பவம் நடைபெற்றது என தெரிவித்த பிரகதி, நான் உடனேயே அவரை அனைவர் முன்பு அசிங்கப்படுத்த விரும்பவில்லை. அதன் பிறகு மாலையில் அவரை என் கேரவனுக்கு வரவைத்து இது பற்றி பேசினேன். 'நான் உங்களிடம் அப்படி நடக்க எதாவது தவறாக சிக்னல் கொடுத்தேனா, அல்லது என் பாடி லேங்குவேஜ் உங்களுக்கு அப்படி தோன்றியதா என கேட்டேன்.
அவர் இல்லை என பதில் கூறினார். நீங்கள் செய்தது மிகவும் தவறு, சீப் பிஹேவியர்.. என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.. நான் அந்த இடத்திலேயே உங்களை அசிங்க படுத்தி இருக்க முடியும். ஆனால் உங்களின் இமேஜை கருத்தில் கொண்டு மாலை வரை காத்திருந்து இதை சொல்கிறேன்" என அவரை எச்சரித்தேன் என கூறி அதிர வைத்தார் அம்மணி.
எப்போதும் தன்னை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஆசைப்படும் இவர், அடிக்கடி உடற்பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மட்டுமில்லாமல், உடற்பயிற்சி செய்வது புகைப்படம், வீடியோ எடுத்து தன்னை பின்தொடரும் ரசிகர்களுக்கும் உத்வேகம் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது ட்ரெட்மில்லில் சில வகையான பயிற்சிகளை செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுலயும் இப்படியா..? என்று வர்ணித்து வருகிறார்கள்.
Tags
Pragathi Mahavadi