நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் 'கீதா கோவிந்தம்' படத்தில் தனது அழகு மற்றும் அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். குறுகிய காலத்தில் தெலுங்கு ரசிகர்களை மட்டுமின்றி தென்னிந்திய பார்வையாளர்களையும் கவர்ந்தார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'சுல்தான்' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். ராஷ்மிகா பாலிவுட்டில் தனது சிறகுகளை விரித்து, 'குட்பை' மற்றும் 'மிஷன் மஜ்னு' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
அதோடு மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகியிருக்கும் 'புஷ்பா' படத்திலும் நடித்திருக்கிறர். இந்தப் படம் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகா தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் குடகு விஜராப்பேட்டையில் உள்ள ஒரு பங்களாவில் வசிக்கிறார். செப்டம்பர் 2020-ல் ஹைதராபாத்தின் கச்சிபவுலி பகுதியில் ஒரு புதிய வீட்டை வாங்கினார்.
அதோடு இந்த வருட தொடக்கத்தில் பாலிவுட் படங்களில் நடிப்பதை முன்னிட்டு, மும்பையில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி தனது செல்ல நாயான ஆராவுடன் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்.
இப்படி அடுத்தடுத்து அசுர வேகத்தில் வளர்ந்து வரும் ராஷ்மிகா சமீபத்தில் ஒரு உள்ளாடை விளம்பரத்தில் அந்த நடிகர் அணிந்திருக்கும் ஜட்டியை ஏக்கத்துடன் பார்த்து ஜொள்ளு விடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த விளம்பரம் இணையத்தில் மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. ஆனால், ஒரு நடிகரின் ஜட்டியை பார்த்து ஒரு பெண் ஜொள்ளு விடுவது போன்ற காட்சிகள் எல்லாம் பார்க்கவே மோசமாக உள்ளது.
அதுவும், யோக ஆசிரியராக வரும் பெண் இப்படி செய்வதெல்லாம் கொடுமையின் உச்சம் என்று ராஷ்மிகா-வை சகட்டு மேனிக்கு விளாசி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இது தான்.