"கிளாமர் ராணி.. ரோஜா மொட்டு.." - சிகப்பு நிற புடவையில் அப்படி பார்த்து... ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த கீர்த்தி சுரேஷ்..!


தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகையே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். 
 
ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் எக்கச்சக்க ரசிகர்களைக் கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு ‘மகாநடி’ திரைப்படத்திற்கு தேசிய விருது மிகப்பெரிய கவன ஈர்ப்பாக அமைந்தது.
 
திரையுலகில் கவர்ச்சி காட்டினால் தான் நடிகையாக நீடிக்க முடியும் என்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு கீர்த்தி சுரேஷ் தன்னுடைய அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
 
 
நடிகை கீர்த்தி சுரேஷ் ‘ இது என்ன மாயம் ‘ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து பல படங்கள் நடித்து தேசிய விருது வரை வென்றுவிட்டார்.நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். 
 
 
இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.கொரோனா அலைகளின் காரணமாக பல சினிமா பிரபலங்கள் எந்த வெளிநாட்டிற்கும் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்தார்கள். 
 
 
ஆனாலும், பல நடிகைகள் பக்கத்தில் உள்ள மாலத் தீவிற்குச் சென்று வந்தார்கள். அங்கிருந்து விதவிதமான புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களை தங்கள் அழகால் அதிசயிக்க வைத்தார்கள். கீர்த்தி சுரேஷ் இப்போது தன்னுடைய விடுமுறைக்காக ஸ்பெயின் பறந்துள்ளார். 
 
 
அதன் புகைப்படம், வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு, “நான் இப்போது விடுமுறையில், ஒவ்வொரு நாளும் தான், ஏனென்றால் நான் எனது தொழிலை நேசிக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


அதனை தொடர்ந்து, தற்போது சிகப்பு நிற சேலையில் பருவ மொட்டாக போஸ் கொடுத்துள்ள தனது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை கவர்ந்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post