நடிகை ராதிகா நடித்த வாணி ராணி சீரியலில் நடித்தவர் நடிகை நவ்யா சுவாமி. இவர் தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வருகிறார். அதே போல, தெலுங்கு டிவி சீரியல் நடிகரான ரவி கிருஷ்ணா தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 மூலம் மேலும் பிரபலமான தெலுங்கு நடிகர் ரவி கிருஷ்ணா மற்றும் வாணி ராணி சீரியல் நடிகை நவ்டா சுவாமி இருவரும் தற்போது ‘ஆமே கத’ என்ற சீரியலில் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும்போது இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துவந்தனர். இதனால், சிலர், இருவரும் நிஜமாகவே காதலிக்கிறார்கள் என்று வதந்திகள் பரப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ‘100% லவ்’ என்ற தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நவ்யா சுவாமியும் ரவி கிருஷ்ணாவு ஒன்றாக பங்கெற்றனர். இந்த நிகழ்ச்சியில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.
இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்களும் நெட்டிசன்களும் பொருத்தமான ஜோடி என்று கூறி இருவரும் நிஜவாழ்க்கையிலும் இணைய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது நவ்யா சுவாமி பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக கலந்து கொள்ளப்போகிறார் என்ற யூகங்கள் வட்டமடித்தன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை அப்லோட் செய்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கவுன் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Tags
Navya Swamy