இயல்பாகவே கேரளாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு. அந்த வரிசையில் அசின் முதல் நயன்தாரா வரை பல நடிகைகளை உதாரணத்திற்கு கூறலாம். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகர் லட்சுமி மேனன்.
இப்படத்திற்கு பின் குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகுருத்தண்ட, கொம்பன், வேதாளம் ஆகிய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார்.
ஆனால், சில வருடங்களாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகை லட்சுமி மேனன், தமிழ் சினிமா பக்கம் வரவில்லை. இந்நிலையில், தற்போது முத்தையா இயக்க விக்ரம் பிரபு நடித்து வரும் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து வருகிறார் லட்சுமி மேனன்.
இந்நிலையில் லட்சுமிமேனன் தற்போது படங்களில் நடிப்பதற்காக தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்துள்ளார் தற்பொழுது ஸ்லிம்மாக இருக்கும் லட்சுமி மேனன் விக்ரம் பிரபு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது, அதனால் தற்போது நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு கின்னென அமர்ந்து கொண்டிருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
0 கருத்துகள்