தமிழ் சினிமாவின் ஹோம்லி நடிகை, லட்சணமான நடிகை என பெயரெடுத்திருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பாட்டி, அம்மா என திரைப்பின்னணி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கீர்த்தி சுரேஷுக்கு பெரிய நடிகர்களுடன் நடிக்கும் படவாய்ப்புகள் மிகவும் சுலபமாக கிடைத்தது.
ஆனால், அதையெல்லாம் அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல் ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டலுக்கு ஆளாகியுள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான இவர் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அடையாளம் காணப்பட்டார்.
அதையடுத்து ரஜினிமுருகன் , தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தெலுங்கில் மகாநடி திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்று தென்னிந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்தார்.தற்போது இருக்கின்ற சினிமா நிலைமையில் ஒரு நடிகை தனது திறமையாகவும்.
அழகாக இருந்தாலும் சற்று ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது அழகை கட்டினால் மட்டுமே ரசிகர்கள் அவரை பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆடையை குறைத்து இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வபொழுது புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். கடைசியாக தெலுங்கில் இவர் நடித்து வெளிவந்த ரங்குதே படம், ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.
ரொமான்டிக் படமாக வெளிவந்த இந்த படத்தில் படுக்கை அறை காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் கீர்த்தி சுரேஷ். இதை சிலர் விமர்சித்தாலும், கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் அவர் திடீரென கிளாமருக்கு மாறி விட்டதற்கு உற்சாக வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
என்னதான் டாப் நடிகையாக உயர்ந்தாலும் கவர்ச்சி விஷயத்தில் எப்போதும் கட்டுப்பாடோடு இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது, புடவைக்கு ஓவர் கோட் அணிந்து கொண்டு வித்தியாசமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.
0 கருத்துகள்