சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ஸ்ரிதிக்காவா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி, தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் ஸ்ரித்திகா. பிரேமம் மலர் டீச்சரைப் போலவே, தனது நாதஸ்வரம் சீரியலில் மலர் கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் இவர்.
 
நாதஸ்வரம் சீரியலைத் தொடர்ந்து, குலதெய்வம் சீரியலில் நடித்தவர், தற்போது விஜய் டிவியின் கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் நடித்து வருகிறார்.விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது கல்யாணமாம் கல்யாணம் சீரியல். 
 
தேஜா நாயகனாகவும், ஸ்ரீத்து நாயகியாகவும் நடித்துள்ள இத்தொடரை பிரம்மா இயக்கி வருகிறார். ஆர்.சுந்தர்ராஜன் மற்றும் மௌலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். காதல், குடும்பம், பாசம், எதிர்ப்பு என உணர்ச்சிகளின் கலவையாக உள்ள இந்தச் சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளம். 
 
 
இளமையான காதல் கதையை குடும்பப் பின்னணியில் சொல்லி இருப்பதே இந்த சீரியலின் வெற்றிக்கான காரணம். குலதெய்வம், கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்து அதிகம் பிரபலமானவர் நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீ. இவர் வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 
 
 
34 வயதாகும் இவருக்கு, கடந்த 2019 – ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்கள். 
 
 
அந்த வகையில், தற்போது கவர்ச்சி உடையில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அதிலும், முட்டிக்கு மேல் எறிய உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை Inch by Inch வர்ணித்து வருகிறார்கள். சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் ஸ்ரித்திகா-வா இது என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--