"மொரட்டு கட்ட... கிளாமர் குயின்.." - கவர்ச்சி உடையில் கவனம் ஈர்க்கும் அஞ்சலி நாயர்..!

 
தமிழ் சினிமாவில் தங்களது நண்பன் செல்வகண்ணன் இயக்குனர் ஆக வேண்டும் என்பதற்காக 50 நண்பர்கள் சேர்ந்து பணம் முதலீடு செய்து தயாரித்த 'நெடுநல்வாடை' படம். 
 
இந்த படம் கடந்த 2019-ம் வருடம் வெளியானது. பல போராட்டங்களைச் சந்தித்த இந்தப் படம் பத்திரிகையாளர்களின் பாராட்டையும், திரையுலகத்தினரின் பாராட்டுக்களையும் பெற்றது. 
 
இப்படத்தில் முதலில் கதாநாயகியாக அதிதி மேனன், தான் நடித்தார். ஆனால், படப்பிடிப்பு நடந்த சில நாட்களில் இயக்குனர் மீதே பொய்ப் புகார் கூறி, படத்தில் நடிக்க மறுத்து போய்விட்டார். 
 
அதன் பின்னர் நடிக்க வந்தவர்தான் மலையாள நடிகை அஞ்சலி நாயர். இந்த படத்தைப் பார்த்த பலரும் அஞ்சலியின் நடிப்பைப் பாராட்டித் தள்ளினார்கள். கிராமத்துப் பெண் அமுதா கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்திருந்தார் என்று அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்தது. 
 
 
ஆனால், அஞ்சலி நாயர் ஹீரோயின் ஆகும் முன்பு ஏர்-ஹோஸ்டஸ் ஆக பணி புரிந்தவர். இந்தப் படத்தின் பிரமோஷனுக்குக் கூட வர முடியாமல் அவர் பறந்து கொண்டிருக்கிறார். 
 
 
சீக்கிரமே அவர் அந்த வேலையை விட்டு வரும் அளவிற்கு பட வாய்ப்புகள் வரும். தமிழ் சினிமாவில் அவருக்கு சிறப்பான இடம் காத்திருக்கிறது என்று கோலிவுட்டில் பேசினார்கள். 
 
 
ஆனால், யாரு கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை. படம் வெளியான 2019-ம் வருடம் இறுதியில் கொரோனாவால் உலகமே திணறியது. இதனால், சினிமா உலகம் பெருத்த அடி வாங்கியது. 


இந்நிலையில், தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார் அம்மணி.

Post a Comment

Previous Post Next Post