நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்க கூடிய நபர். அரசியல், சமூக பிரச்சனை, சினிமா என அனைத்து விஷயங்களுக்காகவும் கலந்து கட்டி குரல் கொடுத்து வருகிறார்.
அப்படி அவர் அள்ளி விடும் கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவாளர்களை சில சமயங்களில் செம்ம கடுப்பாக்கி விடுகிறது. அதனால் கமெண்ட்ஸில் சகட்டு மேனிக்கு திட்டி தீர்ப்பது வாடிக்கையாகிவிட்டது.
தன்னை பற்றி யார் தூற்றி பேசினாலும், அதெல்லாம் என் கால் தூசி என தவிர்த்து விட்டு வழக்கம் போல் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
இவரை விமர்சிப்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சமூக வலைத்தளத்தில் ஆதரித்து கருத்து போடுபவர்களுக்கும் குறைவே இல்லை. எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலப்பறை செய்யும் கஸ்தூரி இந்த முறை, வெளியிட்டுள்ள வீசியோ ஒன்று ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.
பிரபல தெலுங்கு பாடகி மோஹனா போகுராஜு பாடிய புல்லட்டு பண்டி என்ற பாடலுக்கு புடவை கட்டிக்கொண்டு நடு ரோட்டில் ஆட்டம் போட்டுள்ள அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Tags
Actress Kasthuri