"இந்த இடுப்புக்கு ஈடுகொடுக்க ஆளே இல்ல.." - இணையத்தை கலக்கும் அனுஷ்காவின் ஹாட் பிக்ஸ்..!

 
தமிழ் தெலுங்கில் உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலாமானவர் அனுஷ்கா ஷெட்டி. 
 
2005ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இந்த படத்தில் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. 
 
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் கமிட்டானர். 2006ம் ஆண்டு மாதவனுடன் ரெண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற மொபைலா...மொபைலா.... பாடல் ஹிட் பாடலாக அமைந்து இவரை புகழின் உச்சத்தை தொட வைத்தது. 
 
‘தமிழ்,தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்த இவருக்கு திறமையை நிரூபிக்கும் திரைப்படமாக அமைந்தது அருந்ததி. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக பாக்ஸ் ஆபிசில் ஹிட்டடித்தது. அதுவரை கவர்ச்சி நடிகையாக காணப்பட்ட அனுஷ்காவின் ரேஞ்சே அருந்ததி படத்திற்கு பிறகு மாறியது. 
 
 
இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்தார். வரலாற்றுத் திரைப்படங்களிலும், சவால் நிறைந்த கதாபாத்திரங்களான ருத்ரமா தேவி, பாகுபலி போன்ற படங்களில் துணிச்சலுடன் நடித்து அதிலும் வெற்றி கண்டார். 
 
 
மேலும், இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்திற்காக உடல் எடையைகூட்டி அப்படத்தில் மிகவும் குண்டான பெண்ணாக காணப்பட்டார். இருப்பினும் இந்த திரைப்படம் தோல்வியைத் தழுவியது. மேலும் அந்த படத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க பெரும் அவதிப்பட்டார். 
 
 
அனுஷ்காவுக்கு உடல் எடை கூடியதால் தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. 39 வயதாகும் அனுஷ்காவின் திருமணம் குறித்து அவ்வப்போது கிசு கிசுக்கள் வெளியாகி வந்தன. தற்போது அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 
 
 
தெலுங்கு இயக்குனர் ஒருவரை அனுஷ்கா காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக புதிய தகவல் வேகமாக தற்போது பரவி வருகிறது.

 
இந்நிலையில், தற்போது இளம் வயதில் இடுப்பை காட்டி ஆட்டம் போட்ட அனுஷ்காவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், இந்த இடுப்புக்கு ஈடுகொடுக்க ஆளே இல்ல.. என்று வர்ணித்து வருகிறார்கள்.