'கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படம் மூலமாக தெலுங்கில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமாகிறார்.
யோகிபாபு , வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்ஷனும் தயாரித்துள்ளது.
ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் மற்றும் 'so baby ' ஆகிய பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு, தள்ளிவைக்கப்பட்ட நிலையில் ஒருவழியாக அக்டோபர் 9 ஆம் தேதி அன்று படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டும் வகையில், புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வரும் வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, 'செல்லமா செல்லமா' பாடலின் Glimpse வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்னுடைய கியூட் ரியாக்ஷனால் கொள்ளை கொண்டுள்ளார் பிரியங்கா.இந்நிலையில், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரியங்கா தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் படி வந்திருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Tags
Priyanka Mohan