விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னதம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருப்பவர் பாவனி ரெட்டி. ஆந்திராவை சேர்ந்த அவர் தற்போது பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக வந்திருக்கிறார்.
அவர் தன்னுடைய கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி மிகவும் எமோஷ்னலாக பேசி அனைவரையும் கலங்க வைத்தார்.கணவர் பிரதீப்பும் சீரியலில் நடித்து வந்தவர் தான். இருவரும் ஒன்றாக நான்கு வருடங்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து அதன் பிறகு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் குழந்தை பெறலாம் என நினைத்திருந்த சமயத்தில் தான் பிரதீப் குடிபோதையில் தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார். அந்த சமயத்தில் என்னைப் பற்றி பலரும் பல்வேறு விதமாக பேசினார்கள், அவரை நான்தான் கொலை செய்துவிட்டேன் என்று கூட குற்றம் சாட்டினார்கள் என பவானி ரெட்டி மிகவும் உருக்கமாக பேசியிருக்கிறார்.
ஆனால் இந்த சர்ச்சைகளுக்கு நடுவிலும் கணவரது குடும்பத்தினர் தான் தன்னை புரிந்து கொண்டு ஆதரவாக இருந்தார்கள் எனவும் பாவனி ரெட்டி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் கணக்கில் தற்போது பாவனியின் ஒரு கவர்ச்சியான புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அது தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
சீரியலில் மிக ஹோம்லியாக நடிக்கும் பாவனி இப்படியான உடைகளில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்