ஓடிடியில் "A"ந்த மாதிரியான அல்லது வன்முறை சார்ந்த கதைகளுக்கே மவுசு அள்ளுது. அத்தகைய படங்களையே காசு கொடுத்து வாங்குகிறார்கள். ரசிகர்களும் விரும்பிப் பார்க்கிறார்கள்.
அதற்காகவே பல படங்களை தயாரித்து வருகிறார் ரோனி ஸ்க்ரூவிலா. அதில் ஒன்றுதான் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக இருந்த காண்டம் பரிசோதனையாளர் படம்.
கதைப்படி பிரபல காண்டம் தயாரிப்பு நிறுவனம் ஒன்று சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதியவகை காண்டத்தை படத்தில் ஹீரோயினிடம் கொடுத்து அது எத்தகைய உணர்வை தருகின்றது, எப்படியான மாற்றாங்கள் தேவை என்பதை சோதனை செய்வார்களாம்.
அப்படியொரு காண்டம் பரிசோதனையாளர் வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக இருந்தது. அவரை மையப்படுத்தியே கதையும் எழுதப்பட்டது. இந்தப் படத்துக்கு ஆரம்பத்திலேயே பல சிக்கல்கள்.
சாரா அலிகான் உள்பட பல நடிகைகள் இந்த வேடத்துக்காக அணுகிய போது, நடிக்க முடியாது என மறுத்தனர். இறுதியாகத்தான் ரகுல் ப்ரீத் விரும்பி ஒப்புக் கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இந்த கதாபாத்திரம் குறித்து சர்ச்சையான கருத்துகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தன. ஆனால், அதனால் படம் கைவிடப்படவில்லை.
காண்டம் தயாரிக்கும் நிறுவனங்களே இந்தப் படம் வருவதை விரும்பவில்லையாம். ஏனென்றால், காண்டம் குறித்து கற்பனையான கருத்தை கூறினாலும், அப்படியான காண்டம் தான் வேண்டும் என படத்தை பார்பவர்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டால் என்ன செய்வது என்று படத்தை கைவிட வலியுறுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, தற்போது, படத்தை ஒத்தி வைப்பதாக ரோனி ஸ்க்ரூவிலா அறிவித்துள்ளார். படம் மொத்தமாக கைவிடப்படும் என தெரிகிறது. இது ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.
Tags
Rakul Preeth Singh