"கிளாமர் மகாராணி..." - படுக்கையில் குப்புற படுத்தபடி.. படு சூடான போஸ் கொடுத்துள்ள புன்னகையரசி சினேகா..!

 
நடிகை சினேகா, திருமணம் ஆகி குழந்தை பெற்று கொண்ட போதிலும் அவர் நடிக்கும் படங்களுக்கும், விளம்பரங்களுக்கும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இரண்டாவது குழந்தை பெற்ற பின்னர் உடல் எடை கூடி காணப்பட்ட சினேகா தற்போது... மளமளவென குறைத்து யங் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார்.
 
 
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சினேகா துபாயில் படித்து வளர்ந்தபின் அவருடைய குடும்பம் தமிழகத்துக்குக் குடிபெயர்ந்தது. 'இங்கணே ஒரு நிலாபக்‌ஷி' என்னும் மலையாளப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 
 
 
தொடர்ந்து தமிழில் சுசி கணேசனின் 'விரும்புகிறேன்' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்தப் படம் வெளியாகத் தாமதமாகவே அப்போது 'அலைபாயுதே' படத்தின் மூலம் பெரும்புகழ் அடைந்திருந்த மாதவனின் ஜோடியாக நடித்து 2001-ல் வெளியான 'என்னவளே' சினேகாவை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய படமாக அமைந்துவிட்டது. 


முதல் படத்திலேயே தன் அண்டைவீட்டுப் பெண் போன்ற தோற்றத்தால் மட்டுமல்லாமல் முதிர்ச்சியான நடிப்பாலும் கவனிக்க வைத்தார் சினேகா. அதே ஆண்டில் இயக்குநர் லிங்குசாமியின் முதல் படமான 'ஆனந்தம்' படத்தில் நடித்தார் சினேகா. 
 
 
 
அந்தப் படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் அவருக்கான அறிமுகப் பாடல் போல் அமைந்த 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்' அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் பாடல் ஆனது. அதில் புதுப்பொலிவுடனும் பாந்தமான அழகுடனும் மின்னிய சினேகா தமிழத்தின் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். 
 
 
இதே ஆண்டில் 'தொலி வலப்பு' என்னும் படத்தில் நாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார். இந்நிலையில், தெலுங்கில் ஏவண்டோ ஸ்ரீவாரு என்ற படத்தில் இடம் பெற்ற சினேகாவின் கிளாமர் காட்சிகள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. 


இதனை பார்த்த ரசிகர்கள், புன்னகையரசி சினேகாவா இது..? கிளாமர் மகாராணி.. என்று வர்ணித்து வருகின்றனர்.