சமீபத்தில் நாக சைதன்யா - சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தனர். இது திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருவருக்கிடையே பல்வேறு திரையுலக பிரபலங்கள் பேசிய சமரசம் அனைத்துமே தோல்வியில் முடிந்துள்ளது. இருவரின் பிரிவு துரதிர்ஷ்டவசமானது என்று நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா தெரிவித்திருந்தார்.
இருவருடைய பிரிவு அறிவிப்புக்குப் பிறகு, பிரிவுக்கான காரணங்கள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணமுள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமந்தாவும் தன்பக்க விளக்கத்தைக் கொடுத்துவிட்டார்.
சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்குக் காரணம் சமந்தாவின் டிசைனர் ப்ரீத்தம் ஜுகல்கர்தான் என ரசிகர்கள் பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இணையத்தில் ப்ரீத்தம் ஜுகல்கரின் பெயர் விவாதத்துக்குள்ளானது.
இந்நிலையில் ரசிகர்களின் இந்த விமர்சனத்துக்கு ப்ரீத்தம் ஜுகல்கர் விளக்கம் அளித்துள்ளார். சமந்தா எனக்குச் சகோதரி போன்றவர். எங்களுக்குள் அக்கா-தம்பி உறவு தான். அதை தவிர வேறு எதுவும் இல்லை என கூறியுள்ளார்.
இந்நிலையில் தான், அவருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றது. மேலும், ப்ரீத்தம் ஜுகல்கர், என்னை பற்றி நாகசைதன்யா-வுக்கு நன்றாக தெரியும், இப்படி ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கும் போது அவர் அமைதியாக இருப்பது எனக்கு கவலையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
ஏன் மகனே இருக்காது.. ஏன் இருக்காது..
0 கருத்துகள்