கடற்கரையில் பாவாடையை முட்டிக்கு மேல் தூக்கி.. - காத்து வாங்கும் கீர்த்தி சுரேஷ்..! - வைரல் க்ளிக்ஸ்..!

 
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகையே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். 
 
ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் எக்கச்சக்க ரசிகர்களைக் கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு ‘மகாநடி’ திரைப்படத்திற்கு தேசிய விருது மிகப்பெரிய கவன ஈர்ப்பாக அமைந்தது. 
 
திரையுலகில் கவர்ச்சி காட்டினால் தான் நடிகையாக நீடிக்க முடியும் என்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு கீர்த்தி சுரேஷ் தன்னுடைய அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
 
தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாவுக்கு ஜோடியாக ‘சர்காரு வாரி பாட்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 
 
 
அத்துடன் ரக்ஷா பந்தன் நாளான இன்று ஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலோ சங்கரில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார் என்பதையும் கீர்த்தி சுரேஷ் உறுதிபடுத்தியுள்ளார். 
 
 
திரையுலகில் கொடிகட்டி பறந்தாலும் கீர்த்தி சுரேஷ் சைடு கேப்பில் புது பிசினஸ் ஒன்றையும் கையில் எடுத்துள்ளாராம். பூமித்ரா என்கிற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் துவங்கியிருப்பது குறித்து வீடியோ மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
 
 
நடிப்பில் மட்டும் இன்றி பல வேலைகளிலும் படு பிசியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் ராமேஸ்வரம் சென்று சூரிய அஸ்தமிக்கும் அழகை பார்த்து மகிழ்ந்துள்ளார். 


அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--