"பூவே உனக்காக"... "ஒன்ஸ் மோர்" பட ஹீரோயின் அஞ்சு அரவிந்த் இப்போது எப்படி இருக்காங்க பாருங்க..!

 
தமிழ் சினிமாவில் நடிச்சு 15 வருஷத்துக்கும் மேலாச்சு. மீண்டும் ஒரு நல்ல கம்பேக் கொடுக்க வெயிட்டிங்!'' - உற்சாகமாகப் பேசுகிறார், நடிகை அஞ்சு அரவிந்த்.'பூவே உனக்காக' திரைப்படத்தில் நந்தினி ரோலில் நடித்தவர். தற்போது, ஜீ தமிழ் 'அழகிய தமிழ் மகள்' சீரியலில் நடித்துவருகிறார்.
 
என் பூர்வீகம் கேரளா. ஒரு மலையாளப் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் கலந்துக்கிற வாய்ப்புக் கிடைச்சுது. அங்கே இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்னைப் பார்த்திருக்காங்க. 
 
அடுத்த சில நாள்களில் ஆக்டிங் வாய்ப்பு வர ஆரம்பிச்சுது. 'அக்‌ஷரம்' மலையாளப் படத்தின் மூலமா என் ஆக்டிங் கரியரைத் தொடங்கினேன். அப்போ காலேஜில் சேர்ந்த புதுசு. படிச்சுக்கிட்டே மலையாளம், தமிழ், கன்னடப் படங்களில் ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சேன்.
 
 
'பூவே உனக்காக', 'ஒன்ஸ் மோர்' படங்களில் விஜய்யுடன் சேர்ந்து நடிச்சேன். இப்போ அவர் மாஸ் ஹீரோ. பல வருஷத்துக்கு முன்னாடி ஒரு பேட்டியில், என்னைப் பற்றிக் குறிப்பிட்டது சந்தோஷமா இருந்துச்சு. விஜய்யை மீட் பண்ணணும்னு ரொம்ப நாளா ஆசை. 
 
 
இன்னும் அதற்கான சூழலும் வாய்ப்பும் அமையலை. அந்த நாளுக்காக வெயிட்டிங். ஒருமுறை அவரின் அப்பா சந்திரசேகர் சாரை மீட் பண்ணி நிறைய பேசினேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் அம்மணி.
 

இந்நிலையில், இவரது சில சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.