"பாத்தாலே பக்குன்னு இருக்கே.." - ராஷ்மிகாவா இது..? - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா..!

 
நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் 'கீதா கோவிந்தம்' படத்தில் தனது அழகு மற்றும் அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். 
 
குறுகிய காலத்தில் தெலுங்கு ரசிகர்களை மட்டுமின்றி தென்னிந்திய பார்வையாளர்களையும் கவர்ந்தார். நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'சுல்தான்' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். 
 
ராஷ்மிகா பாலிவுட்டில் தனது சிறகுகளை விரித்து, 'குட்பை' மற்றும் 'மிஷன் மஜ்னு' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார், அதோடு மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். 
 
 
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகியிருக்கும் 'புஷ்பா' படத்திலும் நடித்திருக்கிறர். இந்தப் படம் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. 
 
 
கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகா தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் குடகு விஜராப்பேட்டையில் உள்ள ஒரு பங்களாவில் வசிக்கிறார். செப்டம்பர் 2020-ல் ஹைதராபாத்தின் கச்சிபவுலி பகுதியில் ஒரு புதிய வீட்டை வாங்கினார். 
 

அதோடு இந்த வருட தொடக்கத்தில் பாலிவுட் படங்களில் நடிப்பதை முன்னிட்டு, மும்பையில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி தனது செல்ல நாயான ஆராவுடன் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். 
 
 
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தான் 'புஷ்பா' திரைப்படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா. இந்த படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு, கிறிஸ்துமஸ் தினத்திற்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. 
 
 
மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் தான் இப்படத்தின் நாயகி ராஷ்மிகாவின் ஃபர்ஸ்ட் லுக் ஸ்ரீவள்ளி என்கிற கதாபாத்திரம் குறித்து படக்குழு அறிவித்தது.
 
 
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பாவாடை ஜாக்கெட்டுடன் அமர்ந்து திருமணத்திற்கு தயாராவது போல் ராஷ்மிகா இருந்தார். 
 
 
இதை தொடர்ந்து வெளியானயான 'சாமி சாமி' பாடலில் ரங்கஸ்தலம் சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் டான்ஸ் ஆடியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
"பாத்தாலே பக்குன்னு இருக்கே.." - ராஷ்மிகாவா இது..? - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா..! "பாத்தாலே பக்குன்னு இருக்கே.." - ராஷ்மிகாவா இது..? - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா..! Reviewed by Tamizhakam on October 31, 2021 Rating: 5
Powered by Blogger.