"யம்மாடி.. இது எப்போமா நடந்துச்சு.." - ரசிகர்களை ஷாக் ஆக்கிய ஸ்ரேயா..!

 
தான் பெண் குழந்தைக்கு தாயாகியிருப்பதாக சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரேயா. எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் கோலிவுட் வந்தவர் ஸ்ரேயா சரண். 
 
அவர் தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழி படங்களில் நடித்திருக்கிறார். ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ரேயா. 
 
அவர் ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபரான ஆண்ட்ரே கோஷ்சீவை காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. 
 
 
கணவருடன் ஸ்பெயினில் வசித்து வந்த அவர் அண்மையில் தான் மும்பையில் செட்டிலானார். தான் கர்ப்பமாக இருப்பதாக 2020ம் ஆண்டு அறிவித்தார் ஸ்ரேயா. 
 
 
இந்நிலையில் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக கணவனும், மனைவியும் இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


இதனை பார்த்த ரசிகர்கள், அம்மாடி.. இது எப்போமா நடந்துச்சு.. சொல்லவே இல்ல.. என்று ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.

--- Advertisement ---