பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் அக்ஷரா ரெட்டி பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக இருக்கிறது. கடந்த 2013ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய ஸ்ராவ்யா சுதாகர் தான் இந்த அக்ஷரா ரெட்டி என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பெயரை மாற்றிக் கொண்டு அக்ஷரா ரெட்டி என்கிற பெயரில் வலம் வருகிறார். அப்பா, சகோதரர் பற்றி பேசிய அக்ஷரா, தான் தங்கக் கடத்தல் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜரானதை பற்றி ஏன் பேசவில்லை?.அக்ஷரா 1992ம் ஆண்டு பிறக்கவில்லை. 2003ம் ஆண்டு அழகிப் பட்டம் வென்றவர்.
அப்படி என்றால் அவரின் வயது என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். விஜய் டிவிக்கு அக்ஷரா ரெட்டி புதிது அல்ல. முன்னதாக 2018ம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான வில்லா டு வில்லேஜ் நிகழ்ச்சியில் ஸ்ராவ்யா சுதாகர் என்கிற பெயரில் பங்கேற்றவர் தான் இந்த அக்ஷரா ரெட்டி. இந்த சீசனில் நிறைய புது முகங்கள் என்று பார்த்தால், பல பிரச்சனை முகங்களாக இருக்கிறதே என்கிறார்கள்.
கடந்த 2013ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்த கேரள தங்க கடத்தல் வழக்கில் மாடல் அழகி ஸ்ராவ்யா சுதாகரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் சர்ச்சை பிரபலங்களை தேடி பிடித்தே நிகழ்ச்சிக்கு கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அவர்களை மக்கள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்வதாகவும் பில்டப் கொடுத்து டிஆர்பியை ஏற்றி வருகின்றனர். இந்த சீசனில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் பின்னணியிலும் ஏகப்பட்ட சர்ச்சைகள் அடங்கி உள்ளதாக நெட்டிசன்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் எல்லாம் மூடு மந்திரமாகவே உள்ளது. எதுவும் வெளிப்படையாகவே இல்லை. சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் காட்சிகள் இடம் பெறுகின்றது.
நமீதா ஏன் வெளியேறினார் என்று தெரியவில்லை. போட்டியாளர்கள் பலரும் எப்போதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக்கொண்டிருகிறார்கள்.. 16 பேருக்கு மூணு வேலை விதம் விதமா சாப்பாடு எங்க இருந்து வருது.. சொல்லப்போனால் 16 பேருக்கு மூணு வேளை சாப்பாடு செய்தால் அதற்கே நேரம் சரியாக போய்விடும்..
என்ன தான் நடக்கிறது பிக்பாஸ் வீட்டில் என்று பலரும் கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், தற்போது அக்ஷரா ரெட்டி குறித்து வெளியாகியுள்ள இந்த விஷயம் பலரையும் அதிர்சிகுள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்துஅக்ஷரா ரெட்டி தரப்பில் இருந்துவிரைவில் விளக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Tags
Akshara Reddy