தமிழ், தெலுங்கு, இந்தி பட நடிகையான மெஹ்ரீன் பிர்சாடா, நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பிறகு நோட்டா, பட்டாஸ் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார் மெஹ்ரீன். தற்போது கன்னட திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார்.
ஹரியானா எம்எல்ஏ குல்தீப் பிஷ்நோயின் மகன் பாவ்யா பிஷ்நோக்கும் மெஹ்ரீனுக்கும் மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கொரோனாவால் தள்ளி போன இவர்களின் திருமணம், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் இந்தியா மற்றும் கனடாவில் பல விளம்பரங்களில் நடித்துள்ளார் மெஹ்ரீன். திருமணம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட பிறகு கிளாமர் ஃபோட்டோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார் மெஹ்ரீன் பிர்சாடா.
தற்போது, சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவதற்கு முழு வீச்சில் இறங்கியுள்ள அம்மணி "இந்த கவர்ச்சி போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா..?" என்று கேட்கும் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.
Tags
Mehreen Pirzada