ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சரண்யா மோகன்..! - கிண்டல் செய்த ரசிகருக்கு.. நெத்தியடி பதில்..!

 
நடிகை சரண்யா மோகனின் உருவத்தை கிண்டல் செய்த ரசிகர்களுக்கு, அவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். மலையாள நடிகை சரண்யா மோகன் தமிழில் ’யாரடி நீ மோகினி, வெண்ணிலா கபடி குழு’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். 
 
இவர் கடந்த ஆண்டு தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 
 
இதனிடையே சரண்யா மோகனின் உடல் எடை கூடி.. அவரது உருவத்தில் சில மாற்றங்கள் ஏற்படவே, அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி கேலிக்கு உள்ளாகின. 
 
 
இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் சரண்யா மோகன் தனது முகநூல் பக்கத்தில், ’நான் ஒரு பெண், ஒரு தாயாக இருப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். 
 
 
தாய்மைக்கு பின் ஒரு பெண்ணின் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். நான் எப்படி இருக்கிறோனோ அதனை ஏற்றுக்கொள்ளும் உண்மையான மனிதர் எனக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ எனப் பதிவிட்டுள்ளார். 
 

அத்துடன், அவர் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவேற்றி உள்ளார்.