வட்ட முகம், புசு புசுவென பப்ளி லுக்.. வெள்ளை தக்காளி.. என்றதுமே அனைவரின் நினைவுக்கும் வருபவர் நடிகை ரக்ஷா ஹொல்லா தான். யாரிவர் என்கிறீர்களா? விஜய் டிவி-யில் ஒளிபரப்பான, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ கடந்த சீசனில் மாயனுக்கு ஜோடியாக நடித்த தேவி தான்.
கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்ட ரக்ஷா, ஜனவரி 26, 1991-ல் பெங்களூரில் பிறந்தார். அவரது குடும்பம், பாரம்பரிய விவசாயக் குடும்பம். ஆனால் குழந்தைப் பருவத்திலிருந்தே நடிக்க வேண்டும் என்பது தான் ரக்ஷாவின் ஆசை.
படிப்பை முடித்த பிறகு, தனது 22 வயதில் அவர் நடிக்கத் தொடங்கினார். இவரது உயரம் 175 செ.மீ, அதாவது கிட்டத்தட்ட 6 அடி. அதோடு நன்றாக நடனமும் ஆடுவார்.சமூக வலைதளங்களில் இவர் ஒரு போஸ்ட் போட்டதும் தேவி நீங்க எப்போ மறுபடியும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் வருவீர்கள் என்று தான் பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த சீரியலை முடித்து தற்போது இரண்டாம் பாகம் அதே கதையை மாதிரி தான் கொஞ்சம் உட்டாலங்கடி போய்க் கொண்டு இருந்தாலும் பலரும் முதல் பாகத்தில் நடித்த தேவியை தான் தேடி வருகிறார்கள்.இரண்டாவது சீசனிலும் முதல் சீசனில் நடித்த கதாநாயகனாக அதே செந்தில் தான் இதிலும் அதே மாயம் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் அந்த சீரியலின் மையமாக இருந்த தேவியை தூக்கி விட்டார்கள் அதற்கு பதிலாக நட்சத்திராவை மகா கேரக்டரில் வைத்திருந்தாலும் முதல் சீசன் போல தான் இதுலயும் முட்டல் மோதல் ஓடிக்கொண்டிருக்கிறது.
ரசிகர்களின் ஏக்கத்தை புரிந்து தற்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் .அதுவும் அவருக்கு பிடித்த அதே மாயன் கேரக்டரின் கெட்டப்பை போட்டு தற்போது அசத்தியிருக்கிறார்.
பச்சை கலர் சொக்கா போட்டு அதற்கு மேட்சாக வேட்டியை மடித்துக் கட்டி கலக்கலாக இவர் போஸ் கொடுத்திருக்கும் போது பார்த்து அதுவும் முகத்தில் பார்வை வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார்.
பச்சை கலர் சொக்கா போட்டு அதற்கு மேட்சாக வேட்டியை மடித்துக் கட்டி கலக்கலாக இவர் போஸ் கொடுத்திருக்கும் போது பார்த்து அதுவும் முகத்தில் பார்வை வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார்.
Tags
Raksha Holla