விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்து போனாலும் தொடர்ந்து ஆணி அடித்தது போல் என்றும் தலைதூக்கி நிற்கும் நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் தான்.
ஜீனியர், சீனியர் என தொடர்ந்து 6 சீசன்களை தாண்டி இந்த நிகழ்ச்சி வெற்றி பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பலரும் இப்போது ஸ்டார்ஸ் தான்.
சீனியர் சீசனில் கலந்துக் கொண்ட திவாகர், சந்தோஷ், பிரவீன், சத்ய பிரகாஷ் இப்போது கோலிவுட்டில் டாப் பாடகர்கள் வரிசையில் நிற்கிறார்கள். அதே போல், ஜூனியர் சீசனில் கலந்துக் கொண்ட நித்யஸ்ரீ, பிரியங்கா, ஸ்ரீஷா பற்றி கேட்கவே வேண்டாம்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாடகி நித்யஸ்ரீ. ஜூனியர் குட்டீஸ் எல்லாம் இப்போது வளர்ந்து விட்டார்கள். அதிலும் குறிப்பாக நித்யஸ்ரீ-க்கு சமூகவலைத்தளங்களில் ஏகப்பட்ட ஃபேன்ஸ்.
அவரை இன்ஸ்டாவில் பின் தொடர்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். இறுதி சுற்று வரை மேடை ஏறிய நித்ய ஸ்ரீயின் குரல் தற்போது சிங்கப்பூர், மலேசியா வரை கேட்கிறது.
பாடகியாக மட்டுமின்றி மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வரும் நித்யஸ்ரீ இசை ஆல்பங்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில், விதவிதமான கவர்ச்சி உடையில் இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இதனை பார்த்த பலரும் நம்ம குட்டி பொண்ணு நித்யாஸ்ரீயா இது..? என்று வாயை பிளந்து வருகிரார்கள்.
Tags
Nithyashree