ஜெய் பீம் படத்தில் செங்கேணியாக நடித்த லிஜோ மோலா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவை ஆண்டுகொண்டிருக்கும் நடிகைகள் அனைவரும் கேரளத்து வரவு தான். லிஜோமோல் ஜோஸும் கேரள வரவு தான். 
 
பூர்வீகம் கேரளா என்றாலும் லிஜோவுக்கு சிறுவயது முதலே தமிழுடன் ஒரு நெருக்கம் இருந்தது. ஆம், கேரளத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதி தான் லிஜோவுக்கு சொந்த ஊர்
 
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சசி, நடிகர்கள் சித்தார்த் - ஜிவி பிரகாஷை வைத்து எடுத்த குடும்ப படமான 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் ராஜி என்ற முக்கிய கேரக்டரில் லிஜோவை நடிக்க வைத்தார். 
 
 
போக்குவரத்து ஆய்வாளரான சித்தார்த்துக்கும், பைக் ரேஸரான ஜிவி பிரகாஷ்க்கும் இடையேயான ஈகோவை சமாளிக்கும் பெண்ணாக சிறப்பான நடிப்பை இதில் வெளிப்படுத்தினார். 
 
இந்தப் படம்தான் 'ஜெய் பீம்' வாய்ப்பையும் லிஜோவுக்கு பெற்றுதந்தது. 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தை பார்த்து தான் 'ஜெய் பீம்' இயக்குநர் த.செ.ஞானவேல் லிஜோவுக்கு வாய்ப்பளித்துள்ளார். 
 
 
அப்படியாக, 'செங்கேணி' பாத்திரத்துக்கு உயிர்கொடுத்து தனது அபார நடிப்பால் இப்போது தமிழக ரசிகர்கள் மனதில் அழுத்தமாக நிலைத்துள்ளார்.
 
இந்நிலையில், இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.


இதனை பார்த்த ரசிகர்கள், ஜெய் பீம் படத்தில் நடித்த செங்கேணியா இது.? என்று வாயடைத்து கிடக்கின்றனர்.
ஜெய் பீம் படத்தில் செங்கேணியாக நடித்த லிஜோ மோலா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..! ஜெய் பீம் படத்தில் செங்கேணியாக நடித்த லிஜோ மோலா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 24, 2021 Rating: 5
Powered by Blogger.