"மெகா சீரியல்... ஃபேமிலி எண்டர்டெயினர்..." - "அண்ணாத்த" படம் பார்த்தவங்கள் என்ன சொல்றாங்க..!


நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் இன்று உலகம் முழுதும் வெளியாகியுள்ளது. 
 
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ், அபிமன்யூ சிங், ஜெகபதி பாபு, பாண்டியராஜன், லிவிங்கஸ்டன், வேலராமமூர்த்தி என ஒரு தயாராகி வெளியாகியுள்ளது "அண்ணாத்த". 
 
சிறுத்தை சிவா இயக்கிய படங்கள் எல்லாம் ஒரு சென்டிமெண்ட் இருக்கும். ஒன்று அண்ணன் தங்கச்சி சென்டிமெண்ட், இல்லாவிட்டால் அப்பா, மகள் சென்டிமெண்ட் இருக்கும், இல்லாவிட்டால் அண்ணன் தம்பி சென்டிமண்ட் இருக்கும். 
 
அத்துடன் ஊருக்குள் பெரிய ஆள் இருப்பார்.அவரை ஹீரோ எதிர்ப்பார்- கடைசியில் மொரட்டு வில்லன்களின் சோலியை முடிப்பார். ரத்த களறியாக காட்சிகள் இருக்கும். 
 
இந்த காட்சிகள் எல்லாம் பல படங்களில் வந்தவை தான் என்றாலும், ரசிக்கும் படியாக திரைக்கதை அமைதிருப்பார். விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், குடும்பத்தோடு பார்க்கும் அளவுக்கு கதை விறுவிறுப்பாக பொழுதுபோக்காக இருக்கும். 
 
அஜித்தை வைத்துதான் இவரது படங்கள் எல்லாம் பெரும்பாலும் இருந்தது. வெளிநாட்டில் அதிகப்படியான திரையரங்குகளில் வெளியாகும் தமிழ்ப் படம் என்ற சாதனையைப் புரிந்துள்ளது 'அண்ணாத்த'. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 
 
இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: "வெளிநாடுகளில் இதுவரை வெளியான தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்ச திரையரங்குகளை 'அண்ணாத்த' பெற்றுள்ளது. 1100-க்கும் மேல் இன்னும்". இவ்வாறு சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்ட சில மணித்துளிகளில் பல்வேறு திரையரங்குகளில் முடிந்துவிட்டது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில், படம் பார்த்தவங்கள் என்ன சொல்றாங்க... வாங்க கேப்போம்..

Post a Comment

Previous Post Next Post