விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகின்றது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் luxury பட்ஜெட் டாஸ்க்கில் போட்டியாளர்கள் தமிழ் சினிமா கதாபாத்திரங்கள் போல் உடை அணிந்து நாள் முழுவதும் அதே கதாபாத்திரம் போல் வீட்டில் நடிக்க வேண்டும் என சொல்லப்பட்டது.நிரூப்புக்கு அந்நியன் அம்பி ரோல், இசைவாணிக்கு சந்திரமுகி ரோல், ராஜுவுக்கு எந்திரன் சிட்டி ரோல் என வழங்கப்பட்டு இருந்தது.
மேலும் சிபி படையப்பா ரோலில் இருக்க அக்ஷரா நீலாம்பரி கெட்டப்பில் இருந்தார்.இந்நிலையில் இன்றைய இரண்டாம் ப்ரொமோ வீடியோவில் யார் சரியாக perform செய்யவில்லை என வாக்கெடுப்பு நடக்கிறது.
அப்போது இமான் அண்ணாச்சி 'நீலாம்பரியாக அக்ஷரா சரியாக செய்யவில்லை' என கூறுகிறார். அவர் படம் பார்த்தாரா இல்லையா என தெரியவில்லை எனவும் கூறுகிறார். ஆனால் அவர் நன்றாக தான் செய்தார் என சிபி கூறுகிறார்.
என்னிடம் நீலாம்பரியாக ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை அவர் என அண்ணாச்சி கூறுகிறார் . உங்க வயசுக்கு நான் சொடுக்கு போட்டு இங்க வாடா என கூப்பிட்டால் நன்றாக இருக்காது என காரணம் சொல்கிறார் அக்ஷரா.
பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள், தங்களுடைய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் கொண்டு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில், மூணு வயசு குழந்தை போடுவது போன்ற ஒரு உடையில் செம்ம க்யூட்டாக இருக்கும் அக்ஷரா ரெட்டியின் புகைப்படங்கள் சில இன்ஸ்டாவில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.